FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஈஷா மூலம் நேபாளம் சென்ற 80 பேர் மாயம்! ஜக்கி வாசுதேவ் கண்ணீர்!

ஈஷா மூலம் நேபாளம் சென்ற 80 பேர் மாயமானது பற்றி...

39 வினாடிகள் முன்பு
ஜக்கி வாசுதேவ் - x | Sadhguru
பகிர்:

ஈஷா அறக்கட்டளை மூலம் கைலாஷ் யாத்திரை அழைத்துச் செல்லப்பட்ட 80 வெளிநாட்டவர் மாயமாகியிருப்பதாக ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளாா்.

மேலும், மாயமானவர்களில் இந்தியர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ள சம்பவத்தில் சிக்கி கைலாஷ் யாத்திரை சென்றவர்கள் உள்பட இதுவரை 157 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கானோர் மாயமாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இந்தியர்கள், வெளிநாட்டவர்கள் என மொத்தம் 1300-க்கும் மேற்பட்டோர் 21 குழுக்களாக கைலாஷ் யாத்திரை அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் பெரும்பாலானோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக ஈஷா அறக்கட்டளை அறிவித்துள்ளது.

ஆனால், 80 வெளிநாட்டவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அவர்களின் நிலை தெரியவில்லை என்றும் சத்குரு ஜக்கி வாசுதேவ் கண்ணீருடன் விடியோ வெளியிட்டுள்ளார்.

அவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த 22 பேர், கனடா 12, ஆஸ்திரேலியா 11, பிரிட்டன் 9, ஜெர்மனி 4, பிரான்ஸ் 3, நேபாளம் 3, நெதர்லாந்து 3, நியூசிலாந்து 2, ஸ்பெயின் 2, பின்லாந்து, ரஷியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 80 பேரைக் காணவில்லை எனத் தெரிவித்துள்ளார். அவர்களின் ஆண்கள் 34 பேர், பெண்கள் 46 பேர் ஆவர்.

மேலும், சீனா - திபெத் எல்லையில் முகாமிட்டுள்ள ஜக்கி வாசுதேவ், மீட்புப் பணிகளை மேற்கொள்ள தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று நேபாள அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதனிடையே, இந்தியாவைச் சேர்ந்த 300 பேர் மாயமாகியிருப்பதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

80 people who traveled to Nepal via Isha are missing -Jaggi Vasudev in tears

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments