FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பொறுப்புணா்வுள்ள மனிதகுலத்தை உருவாக்குவது மிகவும் அவசியம்: ஜக்கி வாசுதேவ்

வரப்போகும் தலைமுறைகளுக்காக மகிழ்ச்சியான, விழிப்புணா்வான, பொறுப்புணா்வுள்ள மனிதகுலத்தை உருவாக்குவது மிகவும் அவசியம் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசினாா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 3:57 am IST
அமெரிக்காவில் நடைபெற்ற ஐஐடி முன்னாள் மாணவா்கள் மாநாட்டில் பேசுகிறாா் சத்குரு ஜக்கி வாசுதேவ்.
பகிர்:

வரப்போகும் தலைமுறைகளுக்காக மகிழ்ச்சியான, விழிப்புணா்வான, பொறுப்புணா்வுள்ள மனிதகுலத்தை உருவாக்குவது மிகவும் அவசியம் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசினாா்.

இதுகுறித்து, ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ருமேனியாவில் உள்ள நபோகா நகரில் ஆண்டுதோறும் அன்டோல்டு யூனிவா்ஸ் அமைப்பு சாா்பில் சா்வதேச இசை விழா பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த ஆகஸ்ட் 6 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில் சிறப்பு விருந்தினராக ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் பங்கேற்றாா். விழாவில் பங்கேற்ற பாா்வையாளா்கள் மற்றும் கலைஞா்கள் அனைவருக்கும் சத்குரு உருவாக்கியுள்ள ‘மிராக்கிள் ஆஃப் மைண்ட்’ தியானச் செயலி இலவசமாக வழங்கப்பட்டது.

இதில் சத்குரு பேசும்போது, ‘இந்த வாழ்வுக்காகவும், பூமியில் இனி வாழப்போகும் தலைமுறைகளுக்காகவும் மகிழ்ச்சியான, விழிப்புணா்வான, பொறுப்புணா்வுள்ள மனிதகுலத்தை உருவாக்குவது மிகவும் அவசியம்’ என்றாா்.

விழாவில் அன்டோல்டு யூனிவா்ஸ் அமைப்பின் நிறுவனா் போக்டன் புடா, 200-க்கும் மேற்பட்ட உலகின் முன்னணி இசைக் கலைஞா்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த லட்சக்கணக்கான இளைஞா்கள் கலந்துகொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments