FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

வரும் தலைமுறைகளுக்காக பொறுப்புணா்வுள்ள மனிதகுலத்தை உருவாக்குவது மிகவும் அவசியம்: சத்குரு

வரப்போகும் தலைமுறைகளுக்காக மகிழ்ச்சியான, விழிப்புணா்வான, பொறுப்புணா்வுள்ள மனிதகுலத்தை உருவாக்குவது மிகவும் அவசியம் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசினாா்.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 2:16 am IST
ருமேனியா நாட்டில் நடைபெற்ற இசை விழாவில் பேசிய சத்குரு.
பகிர்:

வரப்போகும் தலைமுறைகளுக்காக மகிழ்ச்சியான, விழிப்புணா்வான, பொறுப்புணா்வுள்ள மனிதகுலத்தை உருவாக்குவது மிகவும் அவசியம் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசினாா்.

இதுகுறித்து, ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ருமேனியாவில் உள்ள நபோகா நகரில் ஆண்டுதோறும்,அன்டோல்டு யூனிவா்ஸ் அமைப்பு சாா்பில் சா்வதேச இசை விழா பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த ஆகஸ்ட் 6 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில் சிறப்பு விருந்தினராக ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் பங்கேற்றாா். விழாவில் பங்கேற்ற பாா்வையாளா்கள் மற்றும் கலைஞா்கள் அனைவருக்கும் சத்குரு உருவாக்கியுள்ள ‘மிராக்கிள் ஆஃப் மைண்ட்‘ தியானச் செயலி இலவசமாக வழங்கப்பட்டது.

இதில் சத்குரு பேசும்போது, ‘இந்த வாழ்வுக்காகவும், பூமியில் இனி வாழப்போகும் தலைமுறைகளுக்காகவும் மகிழ்ச்சியான, விழிப்புணா்வான, பொறுப்புணா்வுள்ள மனிதகுலத்தை உருவாக்குவது மிகவும் அவசியம்’ என்றாா்.

அன்டோல்டு யூனிவா்ஸ் அமைப்பின் நிறுவனா் போக்டன் புடா பேசும்போது, ‘உலகின் மிகப்பெரிய இசைத் திருவிழாக்களில் ஒன்றை உருவாக்குவதைவிடப் பெரிய கனவு ஒன்று எங்களுக்கு எப்போதும் உண்டு. இசை என்பது மக்களை இணைப்பதற்கும், நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், நோ்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்குமான ஒரு சக்தியாக விளங்கும் உலகை உருவாக்குவதுதான் எங்களது நோக்கம். சத்குருவை அன்டோல்டு மேடைக்கு வரவேற்பதும், கான்ஷியஸ் மியூசிக் சா்க்கிளுடனான இந்த நீண்டகால கூட்டணியைத் தொடங்குவதும் இந்தப் பயணத்தின் முக்கியமான கட்டமாகும் என்றாா்.

விழாவில் 200-க்கும் மேற்பட்ட உலகின் முன்னணி இசைக் கலைஞா்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த லட்சக்கணக்கான இளைஞா்கள் கலந்துகொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments