நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள்: ஐஏஎஸ் அதிகாரிகள் குழு நேபாளம் செல்ல உத்தரவு!
நேபாளத்தில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்பது குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை...
நேபாள நாட்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 100க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ளதையடுத்து மீட்பபி பணிகள் குறித்து முதல்வர் விஜய் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
திபெத் எல்லையையொட்டி நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி ஆற்றில் புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளம் அந்த நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது மிகவும் மோசமான பேரிடர் என்றும் பாதிப்புகள் அதிகமிருக்கும் என்று அந்த நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 165 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 300 இந்தியா்கள் உள்பட 580 வெளிநாட்டினர் என மொத்தம் சுமாா் 800க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று நேபாள அரசு தகவல் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கும்பகோணத்தில் இருந்து சென்ற 54 பேரில் 20 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும் மேலும் 34 பேரின் தகவல் குறித்து தெரியவில்லை என்றும் மேலும் சென்னையில் இருந்து சென்ற மற்றொரு 49 பேர் கொண்ட குழு விவரங்களையும் சேகரித்து வருவதாகவும் பேரவையில் இன்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது குறித்து இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்து வருகிறார். மேலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் துறைசார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழு நேபாளம் செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது. தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமயிலான குழு நேபாளம் செல்கிறது.
அதேபோல ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா, வினோத், தென்னரசு ஆகிய 4 அமைச்சர்கள் தில்லி சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்குமாறும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
CM vijay meeting with officials reg nepal flood,
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.