FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தேர்தல் வழக்குகள்! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனா மனுக்களுக்கு பதிலளிக்க திமுக வேட்பாளர்களுக்கு உத்தரவு!

முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனா மனுக்களுக்கு பதிலளிக்க திமுக வேட்பாளர்களுக்கு உத்தரவிட்டிருப்பது பற்றி...

சென்னை உயர் நீதிமன்றம். - கோப்புப்படம்
பகிர்:

தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி தமிழ்நாடு முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்கும்படி திமுக வேட்பாளர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் விஜய், பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இதேபோல் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன், வாக்காளர் சிவராஜ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

Advertisement

Advertisement

இந்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி, முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி வி. லட்சுமி நாராயணன், விஜய், ஆதவ் அர்ஜுனா மனுக்களுக்கு பதிலளிக்கும்படி தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்த திமுக வேட்பாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 3 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

summary

Election cases! DMK candidates ordered to respond to petitions filed by Chief Minister Vijay and Aadav Arjuna!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments