FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆதவ் அர்ஜுனா இல்லாததால் பேரவை சீக்கிரம் முடிந்துவிடும் என நினைத்தேன்! பிரேமலதா

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேசியது பற்றி...

ஆதவ் அர்ஜுனா, பிரேமலதா விஜயகாந்த் - TN Assembly
பகிர்:

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இல்லாததால் சட்டப்பேரவை சீக்கிரம் முடிந்துவிடும் என நினைத்தேன் என்று தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது.

அப்போது பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:

Advertisement

Advertisement

”பேரவையில் அமர்ந்திருக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் ரக்‌ஷபந்தன் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து சகோதரர்களும் ஒன்றிணைந்து நாட்டின் முன்னேற்றத்துக்கு பணியாற்றுவோம்.

திருவள்ளூர் ஊத்துக்கோட்டையில் ஒரு பெண் அமிலம் வீச்சி படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இறுதியில், தம்பி ஆதவ் அர்ஜுனா இன்று அவையில் இல்லை. ஒன்றரை மணிக்கெல்லாம் முடித்துவிடலாம் எனக் கூறினீர்கள். ஆனால் நீண்டு கொண்டே போகிறது எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பேரவை முன்னவரும் அமைச்சருமான செங்கோட்டையன், “10 நிமிடம் கேட்டீர்கள். ஆனால், 6 நிமிடத்தில் முடித்துவிட்டீர்கள். உங்களைப் போல் அனைவரும் பேசினால் நன்றாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

summary

I thought the assembly would end quickly since Aadhav Arjuna wasn't there – Premalatha

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments