FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தில்லி: உதவிமைய கட்டுப்பாட்டு அறையில் ஆதவ், ராஜ்மோகன் உள்ளிட்ட அமைச்சர்கள் ஆய்வு

தில்லி உதவிமைய கட்டுப்பாட்டு அறையில் தமிழக அமைச்சர்கள் ஆய்வு செய்தது குறித்து...

தில்லி உதவி மையக் கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர்கள் ஆய்வு
பகிர்:

நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் நடவடிக்கையாக தமிழக அமைச்சர்கள் தில்லியில் முகாமிட்டுள்ளனர்.

நேபாளத்தில் கோஷி நதியில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கு, அந்நாட்டின் 7 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் நேபாளத்துக்கு சுற்றுலா சென்றவா்கள் உள்பட 350-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். அதுமட்டுமின்றி, சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ், நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி காணாமல்போயிருப்பது வியாழக்கிழமை தெரியவந்தது.

இந்த நிலையில், நேபாளத்தில் பேரிடரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும், தில்லி சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்குமாறும் அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

முதல்வரின் உத்தரவின்பேரில் அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா, வினோத், தென்னரசு ஆகியோர் தில்லி சென்றுள்ளனர்.

மேலும், பேரிடரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக தில்லி தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையக் கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா, வினோத், தென்னரசு ஆகியோர் ஆய்வு செய்தனர். தமிழர்களுக்கான உதவி மையத்தின் செயல்பாடுகள், தகவல் சேகரிப்பு, மீட்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.

summary

Ministers review operations at the Delhi assistance centre control room to rescue Tamils ​​stranded in the Nepal floods

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments