FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம்: பணி ஆணையை ரத்து செய்தது தவெக அரசு!

செம்மஞ்சேரியில் சர்வதேச அளவில் விளையாட்டு நகரம் அமைக்கும் பணி ஆணையை தவெக அரசு ரத்து செய்துள்ளது பற்றி...

முதல்வர் விஜய். - கோப்புப் படம்
பகிர்:

செம்மஞ்சேரியில் சர்வதேச தரத்தில் மெகா விளையாட்டு நகரம் அமைக்கும் பணி ஆணையை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ரத்து செய்துள்ளது.

சென்னை சோழிங்கநல்லூர் வட்டத்திற்கு உள்பட்ட செம்மஞ்சேரியில் 112 ஏக்கரில் ரூ. 206 கோடியில் 'மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி' எனும் மாபெரும்  விளையாட்டு நகரம் அமைக்க 2023ல் கடந்த திமுக ஆட்சியில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த விளையாட்டு நகரத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் பயிற்சி பெறும் வகையிலும் சர்வதேச அளவில் போட்டிகள் நடைபெறும்போது வெளிநாட்டு வீரர்கள் வந்து செல்ல வசதியாக சென்னை விமான நிலையத்துக்கு அருகேயும் இந்த விளையாட்டு நகரத்தை அமைக்க அரசு திட்டமிட்டிருந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு செய்து விளையாட்டு நகரத்தை அமைக்க ஆர்பிபி என்ற நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டிருந்தது.

இதையடுத்து தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான தவெக இந்த பணி ஆணையை ரத்து செய்வதாக ஆர்பிபி நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

summary

Sports City in Semmancheri: Chief Minister Vijay cancels the work order

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments