தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்?
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நல்லாரி கிரண்குமார் ரெட்டி நியமிக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வருவது குறித்து...
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நல்லாரி கிரண்குமார் ரெட்டி நியமிக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
தமிழ்நாட்டில் தற்போதைய பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் பதவி வகித்து வருகிறார். இவர் கேரள மாநிலத்துக்கும் ஆளுநராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டின் ஆளுநராக ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் நல்லாரி கிரண்குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக சமூக ஊடகங்கள் செய்திகள் வலம் வருகின்றன.
Advertisement
Advertisement
இவர், ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தின் பேரவைத் தலைவராகவும் கடைசி முதல்வராகவும் இருந்தார். 2023-ல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்த கிரண்குமார், தற்போது பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். அதுமட்டுமின்றி, முதல்வர் விஜய்க்கும் இவர் நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், தமிழ்நாடு ஆளுநராக இவர் நியமிக்கப்படுவது குறித்து அரசு தரப்பிலோ கிரண்குமார் ரெட்டியின் தரப்பிலிருந்தோ அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
Andhra Pradesh Ex CM Kiran kumar reddy likely to appointed as Tamilnadu Governor
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.