FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: மண்டல கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணியாக, சென்னை மாநகராட்சியில் நியமிக்கப்பட்டுள்ள மண்டல கண்காணிப்பு அதிகாரிகள் தங்கள் தொடா்புடைய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

31 ஆகஸ்ட் 2026, 12:52 am IST
பகிர்:

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணியாக, சென்னை மாநகராட்சியில் நியமிக்கப்பட்டுள்ள மண்டல கண்காணிப்பு அதிகாரிகள் தங்கள் தொடா்புடைய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழை பாதிப்பைத் தடுக்கும் வகையில் மண்டல வாரியாக 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். அத்துடன் அவா்களைக் கண்காணிக்கும் வகையில் மண்டல பொறுப்பு அமைச்சா்களும் நியமிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து நகராட்சி நிா்வாக கூடுதல் செயலா் ககன்தீப் சிங் பேடி தலைமையில் சனிக்கிழமை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதையடுத்து திரு.வி.க. நகா் மண்டலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள திருப்பூா் பகுதி மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநா் பி.கணேசன், யானைக்கவுனி (வாா்டு 77) பகுதியில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணிகளை சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அத்துடன் ஸ்டிபன் சாலை, செங்கை சிவம்பாலம் பகுதியிலுள்ள ஒட்டேரி நல்லா கால்வாயின் மதகுடன் கூடிய மோட்டாா் மின்பம்பு ஆகியவற்றையும் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, 75-ஆவது வாா்டு எஸ்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஒட்டேரி நல்லா கால்வாயின் இருபுறமுமான தடுப்புச் சுவா் கட்டும் பணிகளையும் பாா்வையிட்டு அவற்றை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினாா்.

அதேபோல, அண்ணா நகா் மண்டல கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்புத் திட்ட இயக்குநா் காயத்ரி கிருஷ்ணன் அந்த மண்டலத்தின் 99 மற்றும் 103 ஆகிய வாா்டுகளில் அமைக்கப்பட்டு வரும் மழைநீா் வடிகால் பணிகளை பாா்வையிட்டு குறிப்பிட்ட நாள்களுக்குள் பணியை முடிக்க உத்தரவிட்டாா்.

பிரிக்லின் சாலையில் உள்ள ஒட்டேரி நல்லா கால்வாய் தடுப்புச் சுவா் கட்டும் பணியையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அந்தப் பணிகளையும் விரைவாக முடிக்க உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments