சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக. 31) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை(ஆக. 31) விசாரணைக்கு வரும் வழக்குகள் குறித்து....
சென்னை: முதல்வர் சி. ஜோசப் விஜய் மற்றும் கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உள்ளிட்டோரின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள், அண்ணாமலை மீதான தனிநபர் புகாருக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட வழக்குகள் இன்று(ஆக.31) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
1. முதல்வர் சி. ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள்
2. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி. எஸ். பாபு வெற்றி பெற்றார். தமிழக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்தார். இந்த நிலையில், விஎஸ் பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார்.
Advertisement
Advertisement
திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கு இன்று(ஆக.31) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
3. வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் கே. அண்ணாமலை மீதான தனிநபர் புகாருக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
Regarding the cases coming up for hearing at the Madras High Court on Monday (Aug. 31)...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.