முகப்பு
தமிழ்நாடு

அரசு மரியாதையுடன் கவிஞர் புவியரசு உடல் தகனம்!

மாநில அரசு மரியாதையுடன் கவிஞர் புவியரசு உடல் தகனம் செய்யப்பட்டது குறித்து...

Updated On : 1 ஜூலை 2026, 11:12 am IST
கவிஞர் புவியரசுவின் உடலுக்கு அரசு மரியாதை - டிஎன்எஸ்
பகிர்:

தமிழ்நாடு அரசின் முழு மரியாதையுடன் கவிஞர் புவியரசு உடல் புதன்கிழமை (ஜூலை 1) தகனம் செய்யப்பட்டது.

சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார். அவருக்கு வயது 96.

முதல்வர் ஜோசப் விஜய் உள்பட பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் திரையுலகம் சார்ந்த பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இலக்கியத் துறையில் புவியரசு பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் ஜேசப் விஜய் அறிவித்திருந்தார்.

அதன்படி, புவியரசு உடல் தகனமானது தமிழ்நாடு அரசின் முழு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க நடைபெற்றது.

இதில், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் மதுராந்தகி, கோவை வடக்கு கோட்டாட்சியர் வினோத் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கவுண்டம்பாளையம் மேட்டுப்பாளையம் தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களான கனிமொழி சந்தோஷ், சுனில் ஆனந்த் மற்றும் சிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞர் சிதம்பரநாதன் கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் இலக்கிய வட்டத்தைச் சார்ந்த பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பெரியநாயக்கன்பாளையம் சரக டி.எஸ்.பி கனகசபாபதி, பெரிய நாயக்கன்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட போலீசார் அவரது பூத உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

summary

writer and poet Puviyarasu's body cremated with state honors....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments