முகப்பு
தமிழ்நாடு

கட்சிப் பதவிகள் வேண்டாம்; அதிமுகவில் உறுப்பினராகவே தொடர்வோம்: எஸ்.பி. வேலுமணி!

கட்சிப் பதவிகள் வேண்டாம்; உறுப்பினராக தொடர்வோம் என்று அதிமுக மூத்த நிர்வாகி எஸ்.பி. வேலுமணி பேட்டியளித்துள்ளதைப் பற்றி...

Updated On : 2 ஜூலை 2026, 1:12 pm IST
எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்.பி. வேலுமணி.
பகிர்:

கட்சி பதவிகள் வேண்டாம்; அதிமுகவில் உறுப்பினராக தொடர்வோம் என்று மூத்த நிர்வாகி எஸ்.பி. வேலுமணி, கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.

சென்னையிலிருந்து திரும்பிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “நாங்கள் கடிதத்தில் தெளிவாக சொல்லி இருக்கின்றோம். கட்சிக்காக உழைத்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்திலிருந்து உழைத்தவர்கள். எடப்பாடி பழனிசாமிக்காக உழைத்தவர்களுக்குப் பதவிகள் வழங்கப்படவில்லை.

Advertisement

Advertisement

அதனால் நான், நத்தம் விஸ்வநாதன் உள்பட அனைவரும் பதவிகள் வேண்டாம், தொண்டராக தொடர்கின்றோம் என சொல்லி இருக்கின்றோம். தெளிவாக கடிதத்தில் சொல்லி இருக்கின்றோம். அதிமுக உறுப்பினராக தொடர்கின்றோம்.

மகளிரணிக் கூட்டத்திற்கு வளர்மதி எப்போதும் கூப்பிடுவார். நேற்றைய கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், அதற்கு முன்னரே நாங்கள் கடிதம் கொடுத்து விட்டோம். அதனால் எங்களை கூப்பிடவில்லை.

கட்சிக்காக எம்.ஜி்.ஆர். ஜெயலலிதா காலத்தில் உழைத்தவர்கள், எடப்பாடிக்காக களத்தில் உழைத்தவர்கள், கட்சியை வளர்த்தவர்கள் என்ற கருத்தில் சொன்னேன். கடந்த நான்காம் தேதி பதவி எல்லாம் கொடுப்பார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், கொடுக்கவில்லை. அவர்களிடமே பதில் கேளுங்கள்.

எங்களைப் பொறுத்தவரை கடிதத்தில் தெளிவாக சொல்லி இருக்கின்றோம். இன்னும் இந்தக் கட்சி நன்றாக இருக்க வேண்டும். அனைவரையும் ஒருங்கிணைந்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்பட வேண்டும்” என்றார்.

summary

Senior AIADMK functionary S.P. Velumani stated at the Coimbatore airport that they do not seek party posts and would continue as AIADMK members.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments