வாழ்நாள் முழுவதும் போற்றிப் பாதுகாக்கும் தருணம்! - முதல்வர் விஜய்யுடன் நடிகர் கவின் சந்திப்பு!
முதல்வர் விஜய்யை நடிகர் கவின் சந்தித்துள்ளது குறித்து...
தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய்யை நடிகர் கவின் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
சரவணன் மீனாட்சி எனும் சின்னதிரைத் தொடர் மூலம் பிரபலமாகி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளவர் நடிகர் கவின். இவர் நடிப்பில் வெளியான டாடா, பிளடி பெக்கர், மாஸ்க் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.
இந்த நிலையில், தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய்யை நடிகர் கவின் இன்று (ஜூலை 9) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பை, முதல்வரின் தனிச்செயலர் ஜகதீஷ் பழனிசாமி ஏற்பாடு செய்துக்கொடுத்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதுபற்றி, நடிகர் கவின் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்,
“சிலர் இயல்பாகவே மற்றவர்களுக்கு உத்வேகம் அளிப்பவர்களாகத் திகழ்கிறார்கள். காலம் அவரது பயணத்தை மாற்றியிருக்கலாம்; ஆனால், அவரின் பணிவு, எளிமை, கனிவு ஆகியவற்றை ஒருபோதும் மாற்றவில்லை.
திரையில் அவரைப் பார்த்து வளர்ந்த லட்சக்கணக்கானோரில் நானும் ஒருவன். இப்போது அவர் தமிழகத்தின் முதல்வராக மக்களுக்குச் சேவை செய்வது தொடர்ந்து உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.
என் வாழ்நாள் முழுவதும் நான் போற்றிப் பாதுகாக்கும் தருணம் இது. பல ஆண்டுகளாக நான் கொண்டிருந்த ஒரு விருப்பத்தை நிறைவேற்றியதற்கு ஜகதீஷ் பழனிசாமி அண்ணாவுக்கு நன்றி” எனக் கூறப்பட்டுள்ளது.
Actor Kavin met Tamil Nadu Chief Minister S. Joseph Vijay in person and conversed with him.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.