மேக்கேதாட்டு விவகாரத்தில் இரு மாநில அரசும் பதற்றத்தை உருவாக்குகிறது: விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
மேக்கேதாட்டு விவகாரத்தில் இரு மாநில அரசும் பதற்றத்தை உருவாக்குகிறது என விவசாயிகள் சங்க குற்றச்சாட்டு குறித்து...
மேக்கேதாட்டு விவகாரத்தில் இரு மாநில அரசும் மக்களிடையே பதற்றமான சூழ்நிலையை உருவாக்குகிறது என்று தமிழக விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
சேலத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவர் பெரியண்ணன் வியாழக்கிழமை செய்தியாளர்களுடன் பேசியதாவது:
முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ. 42 முதல் 45 வரை கொள்முதல் செய்கின்றன. ஆனால், ஆவின் நிறுவனம் ரூ. 30 முதல் 32 வரை மட்டுமே வழங்குகிறது.
Advertisement
Advertisement
அடர் உலர் தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பால் உற்பத்தி குறைந்து வருகிறது. இதனால், பால் உற்பத்தியாளர்கள் கால்நடை வளர்ப்பை கைவிட்டு மாற்றுத் தொழிலுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்தாவிட்டால், பால் தொழிலை விட்டு மாற்றுத் தொழிலுக்குச் செல்ல விவசாயிகள் தயாராக உள்ளனர் என்றார்.
மேலும், மேக்கேதாட்டு அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி வரும் 22-ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேக்கேதாட்டு விவகாரத்தில் இரு மாநில மக்களிடையே ஒரு பதற்றமான சூழ்நிலையை மாநில அரசு உருவாக்கி வருகிறது. மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும். 2030-ஆம் ஆண்டில் உணவுப் பஞ்சம் ஏற்படும். அரசு செய்ய வேண்டிய பணியை விவசாயிகளான நாங்களே செய்து வருகிறோம்.
எல்லை மீறும் போராட்டத்தை நடத்துவோம்
ராஜராஜ சோழன் காலத்தில் அணை கட்ட முயற்சி செய்யப்பட்டபோது, இங்கிருந்து படையுடன் சென்று அதை உடைத்ததாக வரலாறு கூறுகிறது. அரசு இதைக் கண்டுகொள்ளாவிட்டால், விவசாயிகளாகிய நாங்கள் போர் தொடுக்கும் சூழலுக்கு தள்ளப்படுவோம். இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடகாவில் எல்லை அடைப்பு போராட்டம் நடைபெற்றால், அதற்கு பதிலாக நாங்கள் எல்லை மீறும் போராட்டத்தை நடத்துவோம். தவெக அரசு மக்களின் தேவைகளைப் புரிந்துகொள்ளாத அரசாக செயல்படுகிறது என குற்றம் சாட்டினர்.
Both state governments are stoking tension over the Mekedatu issue
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.