தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 10)
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை10, வெள்ளிக்கிழமை) சவரனுக்கு ரூ. 240 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வரும் நிலையில் கடந்த சில நாள்களாக குறைந்து வந்த நிலையில் நேற்று முதல் உயர்ந்து வருகிறது.
இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,120 -ம், செவ்வாய் அன்று சவரனுக்கு ரூ. 1,280 -ம் குறைந்தது.
Advertisement
Advertisement
புதன்கிழமை காலை சவரனுக்கு ரூ. 560 குறைந்திருந்த நிலையில், மாலையில் மேலும் ரூ. 640 குறைந்தது.
நேற்று (வியாழன்) காலை சவரனுக்கு ரூ. 240 குறைந்த நிலையில் மாலை ரூ. 800 உயர்ந்தது.
இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 10, வெள்ளி) சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,06,800-க்கும் கிராமுக்கு ரூ. 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,350-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ. 245-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.45 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
chennai gold and silver price today july 10
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.