ஒட்டும், உறவும் இல்லை என சொல்ல முடியுமா? இடைத்தேர்தல் கூட்டணி பற்றி ஆரூடம் சொன்ன முதல்வர் விஜய்
ஒட்டும், உறவும் இல்லை என சொல்ல முடியுமா? இடைத்தேர்தல் கூட்டணி குறித்து ஆரூடம் சொன்ன முதல்வர் விஜய்
தமிழகத்தில் தீய சக்தியும், தீர்ந்துபோன சக்தியும் வேறு வேறு இல்லை. கூட்டுக்களவாணிகள்தான். அவர்கள் சொல்ல முடியுமா? எங்களுக்குள் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று அறிவிக்க முடியுமா? என முதல்வர் விஜய் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கரூரில் இன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், தொகுதி மறுவரையறை என பல்வேறு விவகாரங்கள் குறித்து காரசாரமாக பேசினார்.
அப்போது, தமிழகத்தில் காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றால் அப்போது, திமுக யாருடன் கூட்டணி வைத்துப் போட்டியிடும் என்பது குறித்து முதல்வர் விஜய் ஆரூடம் சொல்லியிருக்கிறார்.
Advertisement
Advertisement
அதாவது, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஆனால், இந்த நேரத்தில் திமுக யார் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது?
தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையிலும் தீயசக்தியும், தீர்ந்துபோன சக்தியும் சேர்ந்து கட்சி நிதி வாங்கியுள்ளனர்.
மக்களே தெரிந்து கொள்ளுங்கள், தமிழகத்தில் தீய சக்தியும், தீர்ந்துபோன சக்தியும் வேறு வேறு இல்லை. கூட்டுக்களவாணிகள்தான். அவர்கள் சொல்ல முடியுமா? எங்களுக்குள் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று அறிவிக்க முடியுமா? நிரூபிக்க முடியுமா? வரப்போகும் இடைத்தேர்தலில் நிரூபித்துக் காட்டுங்கள். அப்புறமாக பேசுங்கள் என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
மேலும், 2026 தேர்தலில் தக்க பதிலடி தந்தீர்கள், இது போதாது, எப்போதும் எழ முடியாதபடி, நிரந்தர பதிலடி தர வேண்டும், வரும் இடைத்தேர்தலில், திமுகவை வைத்து வெளுத்துவிடங்கள் என்றும் இடைத்தேர்தல் குறித்தும் கரூர் மக்களிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.
தொடர்ந்து முதல்வர் விஜய் பேசுகையில், கரூர் சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது. கரூர் மக்கள் எப்போதும் என் நெஞ்சில் குடியிருப்பார்கள். கரூர் சம்பவம், அரசியல் சதி, சூழ்ச்சியை வருங்கால சந்ததியினருக்கும் தெரிவிக்கும் வகையில், யாரும் யோசிக்கவே கூடாது என்பதற்காக, கரூரில் தவெக சார்பில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
Can one say there are no ties or bonds? Chief Minister Vijay on the by-election alliance.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.