ரூ. 25,000 கோடி கோயில் சொத்துகளை தாரைவார்ப்பதா? முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி!
ரூ. 25,000 கோடி கோயில் சொத்துகளை தாரைவார்ப்பதா? என்று முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வியெழுப்பியுள்ளதைப் பற்றி...
ரூ.25,000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்ப்பதா? என முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வியெழுப்பியிருக்கிறது.
இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “தமிழ்நாட்டில் புதிதாகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்யின் தவெக அரசு, ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே கோயில் சொத்துகளைச் சூறையாடத் தொடங்கி தங்களின் உண்மை முகத்தைக் காட்டியுள்ளது.
Advertisement
Advertisement
கரூரில் உள்ள 4 முக்கிய கோயில்களுக்குச் சொந்தமான ரூ.25,000 கோடி மதிப்பிலான 3,085 ஏக்கர் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்குத் தாரைவார்க்கும் நோக்கில் அவற்றின் மீதான பத்திரப்பதிவுத் தடையை இந்து சமய அறநிலையத்துறை நீக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
குறிப்பாக, நேற்று (ஜூலை 9) காலையில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது பரிந்துரைக் கடிதத்தை அனுப்புகிறார்; அதே நாளில் திருப்பூர் இணை ஆணையரின் பரிந்துரைக் குறிப்பும் வருகிறது; அதே ஜூலை 9-ஆம் தேதியே சென்னையிலுள்ள ஆணையரும் மின்னல் வேகத்தில் தனது இறுதி உத்தரவைப் பிறப்பிக்கிறார்.
ஒரே நாளில் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள மூன்று முக்கிய அரசுத் துறைகள் இவ்வளவு அசுர வேகத்தில் கோப்புகளை நகர்த்தி இறுதி உத்தரவை வெளியிட்டதன் பின்னணி என்ன? கோயில் நிலங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதில் காட்டும் இந்த அசாதாரண வேகத்தை, மக்கள் நலப் பணிகளிலும் ஏழை எளிய மக்களின் தேவைகளிலும் இந்தத் தவெக அரசு காட்ட மறுப்பது ஏன்? ஆக, கோயில்களின் சொத்துகளைக் காப்பதாகக் கூறிக்கொண்டே ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணைபோகிறார் அமைச்சர் ரமேஷ்.
முந்தைய திமுக ஆட்சியில்கூட அரங்கேறாத இந்த இமாலயத் துரோகத்தை, ஆன்மிகப் போர்வையில் வந்துள்ள ஜோசப் விஜய் அரசு மிகத் துணிச்சலாகச் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் உள்பட 4 கோயில்களின் 3,085 ஏக்கர் நிலங்களின் மீதான பத்திரப்பதிவுத் தடையை நீக்க ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவை முதல்வர் விஜய் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
The BJP has questioned Chief Minister Vijay as to whether temple properties worth ₹25,000 crore are being handed over to encroachers.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.