வீடு டூ பள்ளி! சென்னையில் மாணவர்களுக்காக 41 சிறப்பு பேருந்துகள்!
சென்னையில் பள்ளி மாணவர்களுக்காக 41 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது பற்றி...
பள்ளி மாணவர்கள் கூட்ட நெரிசலின்றி, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வசதியாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று முதல் 42 சிறப்பு பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் அருள் பிரகாசம், சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள 2 அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பேருந்து வசதி வேண்டி கடந்த ஜூன் 30 ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இதுதொடர்பாக கடந்த 10 நாள்களாக சைதாப்பேட்டை மற்றும் பல்வேறு பகுதிகளில், பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் மாநகர் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
Advertisement
Advertisement
அப்பகுதிகளைச் சார்ந்த மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்களின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டு, முதல்வர் ஜோசப் விஜய்யிடம் அளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையின்படி, முதல்வர் ஜோசப் விஜய்யின் உத்தரவின்படி, பள்ளி மாணவர்கள் கூட்ட நெரிசலின்றி. பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வசதியாக, மாணவர்களை அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களிலிருந்து பள்ளிக்கும். பள்ளியிலிருந்து அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களுக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் அழைத்து சென்றுவர ஏதுவாக, ஏற்கனவே சென்னையில் உள்ள 25 பள்ளிகளுக்கு 25 பேருந்துகள் மூலம் 50 பயண நடைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நாளொன்றுக்கு 41 சிறப்பு பேருந்துகள் வாயிலாக 84 பயண நடைகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன.
Home to School - 41 Special Buses for Students in Chennai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.