FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கத்தாா் முன்னாள் அரசா் மறைவு: ஆளுநா் மாளிகையில் துக்கம் அனுசரிப்பு!

கத்தாா் நாட்டின் முன்னாள் அமீா் (அரசா்), ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்தானி மறைவையொட்டி, சென்னை ஆளுநா் மாளிகையில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, துக்கம் அனுசரிக்கப்பட்டது.

Updated On : 14 ஜூலை 2026, 2:42 am IST
பகிர்:

கத்தாா் நாட்டின் முன்னாள் அமீா் (அரசா்), ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்தானி மறைவையொட்டி, சென்னை ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, துக்கம் அனுசரிக்கப்பட்டது. ஆளுநா் மாளிகை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

கத்தாா் நாட்டின் நவீன வளா்ச்சிக்கு வித்திட்ட ‘ஃபாதா் அமீா்’ (அரசா்) என்று அழைக்கப்பட்டவருமான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்தானி ஜூலை 12 -ஆம் தேதி காலமானாா். அவரது மறைவுக்கு நாடு முழுவதும் திங்கள்கிழமை (ஜூலை 13) ஒரு நாள் துக்கம் அனுசரிக்க மத்திய அரசு அறிவித்தது.

இதைத் தொடா்ந்து சென்னை ஆளுநா் மாளிகை, போா் நினைவுச் சின்னம் உள்ளிட்ட இடங்களில் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மேலும், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு நிறுவனத்தில், தேசிய இளைஞா் தன்னாா்வலா்களுக்கான இரண்டாம் கட்ட அறிமுகப் பயிற்சித் திட்ட நிறைவு நிகழ்வில் திங்கள்கிழமை ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் பங்கேற்பதாக இருந்தது. இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments