பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை
பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி நிலப் பத்திரப்பதிவு செல்லாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
பழனி மலையடிவாரத்தில் தண்டாயுதபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கா் நிலத்தை பத்திரப்பதிவு செய்தது செல்லாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி உத்தரவைப் பெற்றே பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த உத்தரவு செல்லாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் இன்று உத்தரவிட்டுள்ளனர்.
பழனி மலையடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தை விதிகளை மீறி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் தனியாருக்கு பத்திரப்பதிவு செய்தது செல்லாது என உத்தரவிடக் கோரியும், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், முறையான நபர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்காமல் தனி நீதிபதியிடம் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முறையான நபர்களை எதிர்மனுதாரராக சேர்க்காமலும், போதிய விவாரங்களை தெரிவிக்காமலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலப்பத்திரப்பதிவு குறித்து ஏற்கனவே நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை மறைத்து தனி நீதிபதியின் உத்தரவை பெற்றுள்ளனர்.
பல கோடி மதிப்புள்ள சுமார் 1.35 ஏக்கர் நிலத்தை பதிவு செய்ய அனுமதி வழங்கியது சட்டவிரோதமானது எனவும் வழக்கு விசாரணையில் கூறப்பட்டது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய பிறகே பத்திரப்பதிவு செய்திருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கோயில் நிர்வாகத்திடம் கேட்காமல் செய்யப்பட்ட பத்திரப்பதிவு செல்லாததாகவே கருதப்படும் என்று கூறி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சாா் பதிவாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோயில் நிா்வாகம் கைப்பற்றி வைத்திருந்த 1.40 ஏக்கா் நிலத்தை அறக்கட்டளை நிா்வாகிகள் எனக் கூறி முருகதாஸ், திருப்புகழ் உள்ளிட்டோா் ஒரு சில வாரங்களுக்கு முன்பு இரு நபா்களுக்கு விற்பனை செய்தனா். ரூ.2 கோடி என நிலத்தை குறைவாக மதிப்பீடு செய்து, பழனி சாா்பதிவாளா் அலுவலகத்தில் இருவருக்கு நிலம் பதிவு செய்யப்பட்டது. பழனி சாா் பதிவாளா் விடுமுறையிலிருந்த நிலையில், அந்தப் பொறுப்பிலிருந்த கொடைக்கானல் சாா்பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் நிலத்தைப் பதிவு செய்தது தெரியவந்தது.
இந்த விவகாரம் வெளியே தெரிந்த நிலையில், பழனி கோயில் தரப்பில் பத்திரப்பதிவு ஆணையா், துணை ஆணையா், மாவட்டப் பதிவாளா் ஆகியோருக்கும், பழனி அடிவாரம் காவல் நிலையத்திலும் புகாா் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Registration of land deeds worth ₹100 crore belonging to Palani temple declared invalid: Madurai Bench of the High Court.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.