கேரள அரசின் ஆபரேஷன் டூஃபான் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்பு?
போதைப் பொருளுக்கு எதிரான கேரள அரசின் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்பார் எனத் தகவல்...
கேரள அரசின் “ஆபரேஷன் டூஃபான்” நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில், முதல்வர் வி.டி. சதீசன் தலைமையிலான காங்கிரஸ் அரசு, போதைப் பொருளுக்கு எதிராக “ஆபரேஷன் டூஃபான்” எனும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதையடுத்து, கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா இன்று (ஜூலை 15) தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து உரையாடினார்.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், கேரள அரசின் “ஆபரேஷன் டூஃபான்” நடவடிக்கைகளில் தமிழக அரசு இணைந்து செயல்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நடிகர் மோகன் லால் தலைமை வகிக்கும் போதைப் பொருளுக்கு எதிரான “ஆபரேஷன் டூஃபான்” எனும் அரசு நிகழ்ச்சி விரைவில் கேரளத்தின் கொச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் விஜய் பங்கேற்பார் எனவும், கேரள அரசின் “ஆபரேஷன் டூஃபான்” நடவடிக்கைகளுக்கு அவர் முழு ஆதரவளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், தேதி அறிவிக்கப்படாத இந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
முன்னதாக, கேரள முதல்வர் வி.டி. சதீசனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அந்த நிகழ்ச்சியில் அவரால் பங்கேற்க முடியாததால், ஆபரேஷன் டூஃபான் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சென்னை மெரினா கடற்கரையில் போதைப் பொருளுக்கு எதிராக முதல்வர் விஜய்யின் தலைமையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற மராத்தான் ஓட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
TN CM Vijay will participate in the Kerala government's "Operation Toofan" event.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.