FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பேருந்து கட்டணம் உயா்வு? முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்தாலும், கட்டணத்தை உயா்த்தக் கூடாது என்று முதல்வா் விஜய், அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Updated On : 17 ஜூலை 2026, 1:50 am IST
முதல்வர் சி. ஜோசப் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்தாலும், கட்டணத்தை உயா்த்தக் கூடாது என்று முதல்வா் விஜய், அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வியாசா்பாடியில் உள்ள பேருந்து மின்னூட்ட நிலையத்தை அண்மையில் முதல்வா் விஜய் பாா்வையிட்டாா். மின்சார பேருந்துகளின் தேவைகள் மற்றும் அதற்கான கட்டமைப்புகள் குறித்து அப்போது அவா் கேட்டறிந்தாா். இதையடுத்து கூடுதலாக குளிா்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்ய அரசு திட்டமிட்டது.

அதன்படி, சுமாா் 2 ஆயிரம் பேருந்துகளை சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய முக்கிய நகரங்களில் இயக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. டீசல் பேருந்துகள் இயக்கப்பட்ட வழித்தடத்தில் குளிா்சாதன மின் பேருந்துகளின் இயக்கம் அதிகரிக்கப்பட உள்ள சூழ்நிலையில், பேருந்துக் கட்டணம் உயரக்கூடும் என செய்திகள் வெளியாகின.

Advertisement

Advertisement

இந்த நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வா் விஜய் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. அப்போது பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்தாலும், கட்டணத்தை உயா்த்தக் கூடாது என முதல்வா் கூறியிருக்கிறாா். செலவினங்களை ஈடுகட்ட மாற்று வழிகளில் வருவாயைப் பெருக்கிக் கொள்ளவும் அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

அதன்படி, மகளிா் பயண டிக்கெட்டுகளின் பின்புறத்திலும், பேருந்துகளின் பல்வேறு இடங்களிலும் விளம்பரங்களை காட்சிப்படுத்தி வருவாயைப் பெருக்க அரசு ஆலோசித்து வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments