FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சேலத்தில் தேங்காய் சுடும் பண்டிகை உற்சாகம்!

சேலத்தில் ஆடி மாதத்தின் முதல் நாளை முன்னிட்டு பாரம்பரியமான தேங்காய் சுடும் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது குறித்து...

Updated On : 17 ஜூலை 2026, 11:33 am IST
சேலம் மாநகர் புத்து மாரியம்மன் கோயில் பகுதியில் 9-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் தலைமையில், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் இணைந்து தேங்காய் சுடும் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர். - டிஎன்எஸ்
பகிர்:

சேலம்: சேலத்தில் ஆடி மாதத்தின் முதல் நாளை முன்னிட்டு பாரம்பரியமான தேங்காய் சுடும் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மகாபாரதத்தில் பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசத்தை முடித்த பிறகு, ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டனர்.

அப்போது தங்களை யாரும் அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக தங்களது ஆயுதங்களை விராட தேச எல்லையில் உள்ள ஒரு மயானத்தில் வன்னி மரத்தின் அடியில் ஒளித்து வைத்துவிட்டுச் சென்றனர்.

Advertisement

Advertisement

ஓராண்டுக்கு பிறகு தங்களது ஆயுதங்களை எடுத்து, சுத்தப்படுத்தி, நெருப்பில் வாட்டி, புதுப்பித்து பூஜை செய்த நாள் ஆடி முதல் தேதி என்று கருதப்படுகிறது. இதனை நினைவு கூறும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத பிறப்பு சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.

ஆடி முதல் நாளான்று சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தேங்காய் சுடும் பண் டிகை கொண்டாடப்படுவது வழக்கம். தேங்காய் சுடும் பண்டிகைக்காக பெற்றோர் புதுமணத் தம்பதியை அழைத்து சீர் வரிசை செய்வார்கள். மேலும், புதுமண தம்பதியினா் புத்தாடை அணிந்து, கோயில்களுக்கு சென்று வழிபடுவா். மேலும் உறவினர்களை அழைத்து அசைவ விருந்து வைக்கும் நிகழ்ச்சியும் இந்த நாளில் நடைபெறும். பொதுமக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து நீராடுவார்கள். பின்னர் சிறுவர்கள் தேங்காயை தரையில் தேய்த்து, பின்னா் அதிலுள்ள மூன்று கண்களில் ஒன்றில் ஓட்டைபோட்டு நீரை வெளியேற்றி அதற்குள் பச்சரிசி, தானியங்கள், வெல்லம், பொட்டுக்கடலை, அவல், எள் ஆகியவற்றைப் போட்டு, மஞ்சள் பூசி அழிஞ்சி எனப்படும் மரத்தின் குச்சியில் சொருகி நெருப்பில் சுடுவார்கள். பின்னர் அந்த தேங்காயை விநாயகருக்கு படையலிட்டு நண்பா்கள், உறவினா்களுக்கு வழங்கி மகிழ்வா்.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் ஆடி முதல் நாளான இன்று தேங்காய் சுடும் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. சேலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் தேங்காய் சுட்டு, ஆடி மாதத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

இதன் ஒரு பகுதியாக, சேலம் மாநகர் புத்து மாரியம்மன் கோயில் பகுதியில் 9-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் தலைமையில், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் இணைந்து தேங்காய் சுடும் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.

பாரம்பரிய வழக்கத்தைப் பின்பற்றி நடைபெற்ற இந்த நிகழ்வில், அனைவரும் ஒன்றுகூடி ஆடி மாதம் வளமும் நலமும் தர வேண்டும் என இறைவனை வேண்டி இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி முதல் நாளையொட்டி சேலத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கோட்டை மாரியம்மன், செவ்வாய்ப்பேட்டை, குகை, அன்னதானப்பட்டி மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.

பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பு கூடி தேங்காய்களை சுட்டு சுவாமிக்குப் படைத்தனர்.

summary

Excitement over the Coconut Roasting Festival in Salem...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments