FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தவெக எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்குவதை மு.க.ஸ்டாலின் கைவிட வேண்டும்: நிர்மல் குமார்

தவெக எம்எல்ஏ-க்களை திமுக விலைக்கு வாங்குவதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியிருப்பது பற்றி...

Updated On : 18 ஜூலை 2026, 12:43 pm IST
நிர்மல் குமார் - கோப்புப் படம்
பகிர்:

தவெக எம்எல்ஏ-க்களை திமுக விலைக்கு வாங்குவதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, எங்களுடைய (தவெக) எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கும் வேலையில் திமுக இறங்கியுள்ளது. நேற்று வரையில் இந்த முயற்சி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

ரூ. 40 கோடி, ரூ. 50 கோடி என திமுகவை சேர்ந்தவர்கள் நேற்றுவரை இந்த வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

Advertisement

Advertisement

இந்த முயற்சியில் ஈடுபட்ட வலையமைப்பிலிருந்து நேற்றுவரை பல கோடிகள் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக எங்கெல்லாம் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதோ ரொக்கமாக பிடிபட்டிருக்கிறது.

இந்த முயற்சியை மு.க. ஸ்டாலின் கண்டிப்பாகக் கைவிட வேண்டும்.

சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக எம்எல்ஏ-க்கள் வாக்களிக்க வேண்டும் என்றே விலை பேசுகின்றனர்.

திருச்சி சிவா எப்போது வேண்டுமானாலும் மத்திய அமைச்சராக ஆவார் என திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சும்மாவா சொல்கிறார்? அவர் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் சொல்கிறார்?

அப்படியெனில், அவர்களின் பின்னே பாஜக இருப்பதாகவும், அதனால் அவர்களை அசைக்க முடியாத கட்சி என்றும் அவர் சொல்ல விழைகிறாரா?

இவர்கள் (திமுக) அதிமுகவுடனும் பாஜகவுடனும் சேர்ந்து ஆட்சியமைக்க முயன்றதால்தான் காங்கிரஸும் கம்யூனிஸ்டும் அங்கிருந்து விலகி வெளிவந்தனர்.

திமுக தனியாக நின்றிருந்தால், 20 இடங்கள்கூட வந்திருக்காது. அவர்களின் தனிப்பெரும்பான்மை 20 சதவிகிதத்தைத் தாண்டியது கிடையாது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் இருந்ததாலேயே அவர்களுக்குக் கடந்த முறை வெற்றி கிடைத்தது என்று தெரிவித்தார்.

summary

DMK Cheif M.K. Stalin must desist from buying TVK MLAs, says Minister Nirmal Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments