மாம்பழ கேக் இல்லை இனி முதல்வர் கேக்! த்ரிஷா இந்த கேக்கை தேர்வு செய்தது எப்படி?
மாம்பழ கேக் இல்லை, இனி முதல்வர் கேக் என்றும், த்ரிஷா இந்த கேக்கை தேர்வு செய்தது எப்படி என்பது பற்றியும்.
நடிகை த்ரிஷா, முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளுக்கு ஆர்டர் செய்த மாம்பழ கேக் தற்போது மிகவும் பிரபலமடைந்து, பலரும் அதனை சிம் கேக் என்று கூறி ஆர்டர் கொடுப்பதாக அதனை தயாரித்து விற்பனை செய்து வரும் கடை உரிமையாளர் கூறியிருக்கிறார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52வது பிறந்த நாள் ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அன்று நடிகை த்ரிஷா, பல்வேறு வகையான கேக்குகளை வாங்கியிருந்தார். அதில் சென்னையில் உள்ள ஒரு கடையில் வாங்கப்பட்ட மாம்பழ கேக்கும் அடங்கும்.
அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், ஒரு சில வாரங்களில் மட்டும் கிட்டத்தட்ட 30 முதல் 400 மாம்பழ வென்னிலா கேக்குகள் விற்பனையாகியிருக்கிறதாம் அந்தக் கடையில், இது மிகப்பெரிய சாதனையாம். இப்போதெல்லாம் யாரும் மாம்பழ வென்னிலா கேக் என்று சொல்வதில்லை. சிம் கேக் என்று ஆர்டர் கொடுக்கிறார்கள் என்று கூறி சிரிக்கிறார்.
Advertisement
Advertisement
எங்கள் ஒட்டுமொத்த அணியும் முதல்வர் ஜோசப் விஜய் ரசிகர்கள் என்றும் கூறுகிறார்.
இன்ஸ்டாகிராமில், விஜய் பிறந்தநாள் புகைப்படங்கள் வெளியானதும், அங்கிருந்த கேக்குகளும் அதிக கவனம் பெற்றன. அதில் இருந்த கேக்குகள் எங்கு வாங்கப்பட்டன என்ற இணையங்களில் பலரும் தேடியதில், மாம்பழ கேக் சென்னையிலும் திராமிசு கேக்குகள் பெங்களூரிலும் வாங்கப்பட்டத் தகவல் கிடைத்தது.
உடனடியாக பலரும் தங்களது குடும்பத்தில் கொண்டாட்டம் என்றாலே இந்த கேக்குகளை ஆர்டர் கொடுக்கத் தொடங்கிவிட்டார்களாம்.
ஒரே நாளில் ஒபாமா ஆனது போலத்தான் இந்த இரண்டு கேக் கடைகளுமே மக்களிடைய மிகப்பெரிய விளம்பரத்தைப் பெற்றன.
மேலும் இந்த கேக் ஆர்டர் எப்படி வந்தது என்பது குறித்து அவர் கூறுகையில், முதலில், அந்தக் கேக் எந்த நிகழ்ச்சிகாக ஆர்டர் கொடுக்கப்பட்டது என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது. முதலில் அதுவே குழப்பமாக இருந்தது.
பிறகுதான் இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் எங்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஒரே நாளில் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து வரும் கேக் ஆர்டர்களால் நாங்கள் பரபரப்பாக இருந்தோம். இதற்கு நான் மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 2 வாரங்களிலேயே முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் கேக்குகள் சுமார் 300 முதல் 400 வரை விற்பனையாகியுள்ளன. இது நம்ப முடியாத ஒரு விஷயமாக இருந்தது! இனி இது 'மாம்பழ கேக்' (Mango Cake) என்று அழைக்கப்படுவதில்லை; இப்போது இது 'சிஎம் கேக்' (CM Cake) என்று அழைக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இப்போது அப்படித்தான் ஆர்டர் செய்கிறார்கள் கூறியிருக்கிறார்.
குறிப்பாக இந்த கேக் வேண்டும் என்று நடிகை த்ரிஷா எவ்வாறு தெரிவு செய்தார், யார் மூலமாக தங்கள் கடை பற்றி அவருக்குத் தெரிய வந்தது, யார் எங்களுக்கு இந்த ஆர்டரை கொடுத்தது என்பது எங்களுக்கு இன்னமும் ரகசியமாகவே இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No more mango cake now it's the 'Chief Minister Cake'! How did Trisha choose this cake?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.