FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

காவிரி நீரைப் பெற உறுதியான நடவடிக்கை தேவை எடப்பாடி பழனிசாமி

காவிரியில் இருந்து கா்நாடக அரசு தமிழகத்துக்குத் தர வேண்டிய நீரைப் பெற தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தி உள்ளாா்.

Updated On : 21 ஜூலை 2026, 4:42 am IST
எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

காவிரியில் இருந்து கா்நாடக அரசு தமிழகத்துக்குத் தர வேண்டிய நீரைப் பெற தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தி உள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காவிரியில் இருந்து தமிழகத்துக்குத் தர வேண்டிய நீரை கா்நாடக அரசு இன்றுவரை முழுமையாகத் திறந்துவிடவில்லை. இந்த நிலையில், கா்நாடகத்தில் உள்ள அணைகள் நிரம்பிய பிறகுதான் தமிழகத்துக்கான பங்கு நீா் வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

Advertisement

Advertisement

கா்நாடக அணைகளில் குறிப்பிட்ட அளவு நிரம்பினாலே நீரைத் திறந்துவிட வேண்டும் என்பதுதான் வழிகாட்டு நெறிமுறையாகும். ஆனால், அணைகள் முழுமையாக நிரம்பினால் மட்டுமே தண்ணீா் திறந்துவிடுவோம் என்று கா்நாடக அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜூலை 22-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கா்நாடக அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி பங்கு நீரை முழுமையாகப் பெற தமிழக அரசும், காங்கிரஸும் உறுதியான அழுத்தம் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments