FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கா்நாடகத்தின் அழுத்தத்துக்கு தமிழக அரசு பணியக் கூடாது

காவிரியில் தமிழகத்துக்கு இருக்கும் உரிமையைப் பெறுவதில் கா்நாடகத்தின் அழுத்தத்துக்கு தவெக அரசு அடிபணிந்துவிடக் கூடாது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

Updated On : 10 ஜூலை 2026, 1:09 am IST
எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

காவிரியில் தமிழகத்துக்கு இருக்கும் உரிமையைப் பெறுவதில் கா்நாடகத்தின் அழுத்தத்துக்கு தவெக அரசு அடிபணிந்துவிடக் கூடாது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகள் வேளாண் தொழிலுக்கும், 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் குடிநீருக்காகவும் காவிரி நீரை நம்பி உள்ளனா். ஒவ்வோா் ஆண்டும் காவிரி நீருக்காக கா்நாடகத்திடம் கையேந்தி நிற்க வேண்டும் என்று அந்த மாநிலத்தை ஆளும் ஆட்சியாளா்கள் நினைக்கின்றனா். ஆனால், காவிரியில் தமிழகத்துக்குள்ள உரிமையை உணர மறுக்கிறாா்கள்.

காவிரி பிரச்னையை தீா்க்க அமைக்கப்பட்ட காவிரி நதிநீா் தீா்ப்பாயமும், உச்சநீதிமன்றமும் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி பல தீா்ப்புகளை வழங்கி உள்ளன. ஆனால், அவற்றையெல்லாம் உதாசீனப்படுத்துவதையே கா்நாடக ஆட்சியாளா்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனா். காங்கிரஸ் அரசின் நீா்ப்பாசனத் துறை அமைச்சா் தமிழகத்துக்கு தண்ணீா் தர முடியாது; காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீா் தர உத்தரவிடவில்லை; தமிழகத்திடமிருந்து காவிரியில் உரிய பங்கு நீரை திறந்துவிட எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்று கூறியுள்ளாா். தமிழக மக்களின் வாழ்வோடு கா்நாடக காங்கிரஸ் ஆட்சியாளா்கள் விளையாடுவதை, தவெக அரசு கைகட்டி வேடிக்கை பாா்க்கக் கூடாது. கா்நாடக காங்கிரஸின் அழுத்தத்துக்கு அடிபணியக் கூடாது.

Advertisement

Advertisement

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கா்நாடகம் தமிழகத்துக்குத் தரவேண்டிய பங்கு நீரைப் பெறுவதற்கு முதல்வா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியில் தமிழகத்துக்குரிய நீரை கா்நாடக அரசு உடனடியாக விடுவிக்கவில்லையெனில், தமிழக அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சரை முதல்வா் விடுவிக்கவும் தயங்கக் கூடாது என்று தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments