FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்

திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் காரில் ஏறி மயக்கம் வருவதாகக் கூறி டிராமா செய்வதாக நிர்மல்குமார் குற்றச்சாட்டு...

Updated On : 20 ஜூலை 2026, 7:43 pm IST
ஆர். நிர்மல்குமார்
பகிர்:

திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் காரில் ஏறி மயக்கம் வருவதாகக் கூறி டிராமா செய்வதாக மின்சாரத் துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் இன்று (ஜூலை 20) குற்றம் சாட்டினார்.

மு.க. ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது தவெகவினர் யாரும் கொலை மிரட்டல் விடுக்கவில்லை என்றும், ஆனால், முதல்வர் விஜய்க்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றம் சாட்டினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியார்களுடன் நிர்மல்குமார் பேசியதாவது:

Advertisement

Advertisement

''ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் பொதுவெளி மேடையில் பேசும்போது முதலமைச்சரை அவதூறாகப் பேசுவதும், கொலை மிரட்டல் விடுக்கும் அளவிற்குப் பேசுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வழி வகுக்கும். முதலமைச்சரின் கையை உடைப்பேன் என விளாத்திகுளம் எம்.எல்.ஏ. பேசியிருக்கிறார். இதனால்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த கால திமுக ஆட்சியில் அரசுக்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர்கள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 70 வயது பாட்டியை பிடிக்க ஐந்து தனிப்படை அமைத்ததுதான் கடந்த கால திமுக ஆட்சி.

தாம்பரத்தில் மின் பங்கீடு அதிகம் வருவதாக கூறியுள்ளனர். அங்கு மீண்டும் கணக்கீடு செய்யக் கூறியுள்ளேன். ஏனெனில், மின் கணக்கீடு எடுப்பவர்களில் 5,500 இருக்க வேண்டிய இடத்தில் 800 பேர் தான் உள்ளனர்.

ஒருவேளை அவர்கள் தவறுதலாக மின் கணக்கீடு எடுத்து இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி உத்தரவிட்டுளேன். மின் கணக்கீடு எடுத்தவர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தில்லியில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்திற்குரியது.

நீட் தேர்வு மூலம் தரமான மருத்துவர்களை உருவாக்குவோம் என கூறுவது பொய். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் குளறுபடி தான் நடக்கிறது. எனவே, இந்த குளறுபடியான தேர்வில் தரமற்றவர்கள் மருத்துவராக வர வாய்ப்புள்ளது.

மேகதாது விவகாரத்தில் இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் என்ன நடவடிக்கை எடுக்க போகிறோம் என நாங்கள் அறிவிக்க உள்ளோம்'' என நிர்மல் குமார் பேசினார்.

summary

DMK MLA is putting on a drama Nirmal Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments