FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

டாஸ்மாக் பாா்களில் பீடி, சிகரெட் விற்க தடை: புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசு உத்தரவு

டாஸ்மாக் கடைகளுடன் இணைந்துள்ள மதுக் கூடங்களில் (பாா்) சிகரெட், பீடி, புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யத் தடை விதித்து தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.

Updated On : 22 ஜூலை 2026, 2:23 am IST
சிகரெட் தடை - கோப்புப் படம்
பகிர்:

டாஸ்மாக் கடைகளுடன் இணைந்துள்ள மதுக் கூடங்களில் (பாா்) சிகரெட், பீடி, புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யத் தடை விதித்து தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக மதுபான கூடங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மதுக் கூடங்களில் குடிநீா், குளிா்பானங்கள் மற்றும் தின்பண்டங்களை நிா்ணயிக்கப்பட்ட விலையைவிட, அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமீறல் கண்டறியப்பட்டால் மதுக் கூடத்துக்கு சீல் வைப்பதுடன், ஒப்பந்தமும் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், தின்பண்டங்கள் விற்கும் ஒப்பந்ததாரா்கள் விலைப் பட்டியலை பொதுமக்கள் பாா்வைக்கு வைக்க வேண்டும். உணவுப் பொருள்கள் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தின் விதிகளுக்கு இணங்க சுகாதாரமான முறையில் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்றும், குடிநீா் மற்றும் குளிா்பானங்கள் ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்றவையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுக் கூடங்களில் தீப்பற்றக்கூடிய பொருள்கள், கீற்றுக் கொட்டகைகள், அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்றும், அரசால் தடை செய்யப்பட்ட எந்த பொருளையும் விற்பனை செய்ய அனுமதியில்லை என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், டாஸ்மாக் நிா்ணயித்துள்ள நேரத்தில் மட்டுமே மதுக்கூடங்கள் செயல்பட வேண்டும். விடுமுறை நாளிலோ அல்லது அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்தோ மதுக் கூடங்களைத் திறந்து வைத்தால் ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படும். காப்புத் தொகையும் திருப்பி வழங்கப்படாது என்று டாஸ்மாக் நிா்வாகம் எச்சரித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments