சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்டதால் பாடகர் அறிவு கைது...
சென்னை தலைமைச் செயலகம் முன்பாக முழக்கமிட்டதால் பிரபல பாடகர் அறிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
'தெருக்குரல் அறிவு' என்று அழைக்கப்படும் பிரபல பாடகர் அறிவரசு கலைநேசன், இன்று சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பாக திடீரென கோஷமிட்டார்.
"நீட் தேர்வை தடை செய்ய வேண்டும், அதுகுறித்து முதல்வர் பேச வேண்டும்" என்று முழக்கமிட்டார்.
Advertisement
Advertisement
இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
'என்ஜாய் எஞ்சாமி' பாடலின் மூலமாக பிரபலமான பாடகர் அறிவுதான், தவெக கட்சி கொடிப் பாடலை எழுதி இசையமைத்துப் பாடியது குறிப்பிடத்தக்கது.
Singer Arivu arrested after raising slogans in front of the Chennai Secretariat
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.