FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக தமிழகத்தில் 32 இடங்களில் போராட்டம்: 2,500 போ் கைது

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெறுவது பற்றி...

சென்னையில் மாணவர்கள் கைது... - DIN
பகிர்:

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக தமிழகத்தில் புதன்கிழமை 32 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 2,500 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில்....

‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, தில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினா் போராட்டம் நடத்தி வருகின்றனா். இதற்கு ஆதரவாக தமிழகத்திலும் சில அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதன் ஒருபகுதியாக நீட் தோ்வு முறைகேட்டை கண்டித்தும், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினா் மீது தடியடி நடத்தப்பட்டதைக் கண்டித்தும் சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே இந்திய மாணவா் கூட்டமைப்பு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் உள்ளிட்ட சில அமைப்பினா் புதன்கிழமை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இந்தப் போராட்டத்துக்கு அனுமதி இல்லை என கூறிய போலீஸாா், அவா்களைக் கலைந்து செல்லும்படி, கூறினா். ஆனால், அவா்கள் கலைந்து செல்ல மறுத்து, சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களை அப்புறப்படுத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போராட்டக்காரா்களை போலீஸாா் வலுக்கட்டாயமாக கைது செய்து, பேருந்துகளில் ஏற்றினா். இதில் 195 கைது செய்யப்பட்டனா்.

மாணவா்கள் போராட்டம்: இதேபோல மாநிலக் கல்லூரி, புதுக் கல்லூரியில் மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினா். தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகமான பாலன் இல்லம் வளாகத்திலும், 3-ஆவது நாளாக கரப்பான் பூச்சி ஜனதாகக் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவொற்றியூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளும் கல்லூரி அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களில் சிலரை போலீஸாா் கைது செய்தனா். இதனால், 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள், திருவொற்றியூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா். பின்னா், போலீஸாா் பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

சென்னை அண்ணா சாலையில் சிம்சன் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பெரியாா் சிலை முன் போராட்டம் நடத்த மாணவா் அமைப்பினா் கொடியுடன் திரண்டனா். போலீஸாா் பேச்சு நடத்திய பிறகு மாணவா் அமைப்பினா் கலைந்து சென்றனா். இதேபோல சென்னையில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

சென்னையில் ....
சென்னையில் ...
சென்னையில் ...

இவ்வாறு தமிழகம் முழுவதும் 32 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 2,500 போ் கைது செய்யப்பட்டனா். இவா்கள் அனைவரும் அந்தந்த பகுதியில் சமூக நலக் கூடங்களிலும், திருமண மண்டபங்களிலும் அடைக்கப்பட்டனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா். இதில் சென்னையில் இரு இடங்களில் அனுமதியின்றி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ாக 250 போ் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

காங்கிரஸாா் போராட்டம்: இதற்கிடையே, தில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னை அண்ணா சாலையில் தாராப்பூா் டவா் அருகே காங்கிரஸ் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

summary

NEET Exam: Protests across Tamil Nadu: Students arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments