தமிழ்நாட்டு திரையரங்கில் முதல்வர் விஜய்யின் மெழுகுச் சிலை! எங்கு தெரியுமா?
திரையரங்கில் முதல்வர் விஜய்யின் முழு உருவ மெழுகுச் சிலை திறப்பு...
திருக்காட்டுப்பள்ளியில் உள்ள திரையரங்கில் முதல்வர் விஜய்யின் முழு உருவ மெழுகுச் சிலையை தஞ்சாவூர் சட்டப்பேரவை உறுப்பினர் விஜய் சரவணன் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல்வர் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
மாவட்டம் முழுவதும் தஞ்சாவூர், கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளின் அனைத்து திரைகளிலும், சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளில் தலா ஐந்து காட்சிகள் என இன்று மட்டும் மாவட்டம் முழுவதும் சுமார் 150 காட்சிகள் திரையிடப்படுகின்றன. முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கியது.
திரைப்படம் வெளியானதையொட்டி, ரசிகர்கள் அதிகாலையிலிருந்தே திரையரங்குகள் முன்பு திரண்டனர். விஜய்யின் கட்-அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்து, பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.
இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள மாலா திரையரங்கில் முதல்வர் விஜய்யின் முழு உருவ மெழுகுச் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன் கலந்து கொண்டு மெழுகுச் சிலையை திறந்து வைத்தார். பின்னர் மெழுகுச் சிலையுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ரசிகர்களும் விஜய்யின் மெழுகுச் சிலையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர். ரசிகர்களின் உற்சாக ஆரவாரத்தால் மாலா திரையரங்கம் திருவிழா கோலமாக காட்சியளித்தது.
Tanjavur MLA unveils CM Vijays wax statue at the cinema theatre in thanjavur
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.