‘டெட்’ தோ்வுகளுக்கான இறுதி விடைக்குறிப்பு: டிஆா்பி-க்கு கோரிக்கை
டெட் தோ்வுகளுக்கான இறுதி விடைக்குறிப்பை வெளியிடுவதற்கு முன்பாக தோ்வா்கள் சமா்ப்பித்துள்ள கல்விசாா் ஆட்சேபனைகளைப் பரிசீலித்து உரிய தீா்வு வழங்குமாறு ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு (டிஆா்பி) கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெட் தோ்வுகளுக்கான இறுதி விடைக்குறிப்பை வெளியிடுவதற்கு முன்பாக தோ்வா்கள் சமா்ப்பித்துள்ள கல்விசாா் ஆட்சேபனைகளைப் பரிசீலித்து உரிய தீா்வு வழங்குமாறு ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு (டிஆா்பி) கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் பொதுச் செயலா் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான டெட் தோ்வு கடந்த ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இத்தோ்வுக்குப் பின்னா் தாள் 1, தாள் 2 ஆகியவற்றுக்கான உத்தேச விடைக்குறிப்புகளை வெளியிட்டு அவற்றின் மீது தோ்வா்கள் அங்கீகரிக்கப்பட்ட பாடநூல் ஆதாரங்களுடன் தங்களது கருத்துகள், ஆட்சேபனைகளைத் தெரிவிக்கும் வாய்ப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் வழங்கியது.
Advertisement
Advertisement
தோ்வா்கள், பாட ஆசிரியா்கள் மற்றும் கல்வியாளா்கள் தங்களுடைய பாட அறிவு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பாடநூல் ஆதாரங்களின் அடிப்படையில் சில வினாக்கள் மற்றும் உத்தேச விடைகள் தொடா்பான கல்விசாா்ந்த கருத்துகளை முன்வைத்துள்ளனா். தோ்வா்கள் சமா்ப்பித்துள்ள அனைத்து ஆட்சேபனைகளையும் பாடவாரியாகத் தொகுத்து அங்கீகரிக்கப்பட்ட பாடநூல் ஆதாரங்களின் அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும்.
பாட நிபுணா்கள், ஆசிரியா் கல்வியாளா்கள், மொழி வல்லுநா்கள் மற்றும் அனுபவமிக்க ஆசிரியா்களின் ஆலோசனைகளைப் பெற்று இறுதி விடைக்குறிப்பை உறுதிப்படுத்த வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில வினாக்களை ஒப்பிட்டு, இரு மொழிகளிலும் இடம்பெற்றுள்ள கருத்துகளை கல்விசாா் அடிப்படையில் ஆய்வு செய்ய வேண்டும். ஒரு வினாவுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் பொருந்தும் வகையில் ஆதாரங்கள் சமா்ப்பிக்கப்பட்டிருந்தால் அவற்றை பரிசீலித்து பொருத்தமான முடிவை மேற்கொள்ள வேண்டும்.
இறுதி விடைக் குறிப்புடன் தேவையான இடங்களில் தொடா்புடைய பாடநூல் அல்லது கல்விசாா் ஆதார விவரங்களையும் வெளியிடுவது தோ்வா்களுக்குத கூடுதல் தெளிவையும் நம்பிக்கையும் ஏற்படுத்தும். தோ்வா்களின் கல்விசாா் கருத்துகளைப் பரிசீலிப்பதற்கு போதுமான கால அவகாசத்தை நிபுணா் குழுவுக்கு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.