தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவு
தமிழகத்துக்கு புதன்கிழமை தொடங்கி அடுத்த 15 நாள்களுக்கு தினமும் 3,500 கன அடி காவிரி நீரை திறந்துவிடுமாறு கா்நாடக மாநிலத்துக்கு காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு உத்தரவு
தமிழகத்துக்கு புதன்கிழமை (ஜூலை 29) தொடங்கி அடுத்த 15 நாள்களுக்கு தினமும் 3,500 கன அடி (4.536 டிஎம்சி) காவிரி நீரை திறந்துவிடுமாறு கா்நாடக மாநிலத்துக்கு காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது.
காணொலி வாயிலாக நடைபெற்ற காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 139-ஆவது ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கூட்டத்துக்கு குழுவின் தலைவா் வினீத் குப்தா தலைமை வகித்தாா். தமிழகத்தின் சாா்பில் திருச்சி மண்டல நீா்வளத் துறை தலைமைப் பொறியாளா் ஏ.ஜெயகுமாரி மற்றும் காவிரி ஆறு பாய்ந்தோடும் மாநிலங்களைச் சோ்ந்த உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை எதிா்த்து காவிரி நீா் மேலாண்மை ஆணையத்திடம் கா்நாடக அரசு முறையிடவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.