முதல்வர் விஜய்யை வரவேற்க தடல்புடலாக தயாராகும் கர்நாடக விதான சௌதா!
முதல்வர் விஜய்யை வரவேற்க தடல்புடலாக தயாராகிவரும் கர்நாடக விதான சௌதாவைப் பற்றி...
காவிரி நதி நீர் தொடர்பாக கர்நாடகம் செல்லவுள்ள தமிழ்நாடு முதல்வர் விஜய்யை வரவேற்க ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காவிரி நதி நீர் பங்கீடு, மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய், வருகிற ஆக. 3 ஆம் தேதி கர்நாடகம் சென்று அங்கு முதல்வர் டி.கே. சிவக்குமாரை சந்தித்துப் பேசவிருக்கிறார். இதனை தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் வினோத்தும் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு, ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட சட்ட அமைப்புகளின்படியே தமிழ்நாடும் - கர்நாடகாவும் நடந்துகொள்ள வேண்டும், காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்து பேசினால் இந்த பிரச்னையில் எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி, சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
முதல்வர் டி.கே. சிவக்குமார் நேற்று தில்லியில் பேசுகையிலும், விஜய் அவரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறினார். இதற்கிடையில், ஆக. 3-ஆம் தேதி பெங்களூரு வர வாய்ப்புள்ளதாக துணை முதல்வர் ஜி. பரமேஸ்வரா தெரிவித்தாலும், முதல்வர் விஜய்யின் பயணம் குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், முதல்வர் விஜய்யின் வருகையொட்டி, கர்நாடக சட்டப்பேரவையான விதான சௌதாவில் மண்டபம் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அங்கு புதியதாக வண்ணப்பூச்சு மற்றும் ஜன்னல்கள் சீரமைக்கும் பணிகளை கர்நாடக பொதுப்பணித்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தப் பயணம் ரத்து செய்யப்படுவது தொடர்பாகவும் பேச்சுகள் நடைபெறுவதாகவும், அதே நேரத்தில் சந்திப்பு நிகழ்ந்தால் இரு மாநிலங்களுக்குத் தேவையான நீர் தேவை, வறட்சி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
The Vidhana Soudha in Bengaluru is undergoing an extensive structural and aesthetic refurbishment in July 2026, spearheaded by the Public Works Department (PWD) and the Assembly Secretariat.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.