வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: அறநிலையத் துறை
வள்ளலார் சர்வதேச மையம் அமையவுள்ள இடத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க உள்ளதாக நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தகவல்...
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை இன்று (ஜூலை 30) அறிவித்துள்ளது.
மேலும் சர்வதேச மையம் அமையவுள்ள இடத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
வள்ளலார் சத்திய ஞானசபையின் பெருவெளியில் ரூ. 100 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என திமுக ஆட்சியில் 2023 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அத்திட்டத்தை கைவிடுவதாக அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
வள்ளலார் சத்திய ஞானசபையின் பெருவெளியில் ரூ. 100 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க ஒப்புதல் அளித்து, தமிழக அரசு 2023 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்திருந்தது.
இந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கட்டுமானங்கள் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இத்திட்டத்தை கைவிட்டுவிட்டதாக இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளதைக் குறிப்பிட்டார்.
மேலும், சத்திய ஞானசபையின் பெருவெளியில், சுற்றுச்சுவர், நூலகம், யோகசாலை அமக்கப்படும் என அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
Plan to establish Vallalar International Centre dropped: HR&CE Department
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.