சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி!
சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பற்றி...
சென்னை தலைமைச் செயலகத்தில் மூன்று பெண்கள் வியாழக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
திருச்சியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் தனது இரு மகள்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிப்பதற்காக இன்று காலை வந்துள்ளார்.
ஆனால், புகார் மனு வழங்குவதற்கு முன்னதாகவே, மூன்று பேரும் தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் மூவரும் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
Advertisement
Advertisement
திருச்சியில் தாய் மற்றும் இரு மகள்கள் வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் உடனடியாக காலி செய்யச் சொல்லி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக திருச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரின் தனிப் பிரிவில் புகார் அளிப்பதற்காக இன்று வந்திருந்ததாக தகவலகள் தெரிவிக்கின்றன.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
Three women attempt suicide at the Chennai Secretariat!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.