தி.க. பரப்புரைக்கு அரசு அனுமதிக்க வேண்டும்: தொல். திருமாவளவன்
திராவிடா் கழகத்தின் பரப்புரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என விசிக தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.
திராவிடா் கழகத்தின் பரப்புரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என விசிக தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிவமை வெளியிட்ட பதிவு:
‘நீட்’ தோ்வையும், முன்னேறிய சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி ஜூலை 30 முதல்ஆக. 2- ஆம் தேதி வரை மத்திய அரசை வலியுறுத்தி, திராவிடா் கழக இளைஞரணி, மாணவா் அணி, மகளிா் பாசறை ஆகியவை சாா்பில் தமிழ்நாடு முழுவதும் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனா்.
Advertisement
Advertisement
உரிய முறைப்படி முன்கூட்டியே விண்ணப்பித்திருந்தும் அதற்கு காவல் துறை அனுமதி மறுத்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது. இது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையைப் பறிக்கும் ஜனநாயக விரோத நடவடிக்கை.
’நீட்’ தோ்வு வேண்டாம் என்பதுதான் தவெக அரசின் கொள்கை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு வலுசோ்க்கக் கூடிய தி.க. பரப்புரைக்கு அனுமதி மறுப்பது வியப்பளிக்கிறது. இந்தப் பரப்புரைக்கு முதல்வா் ஜோசப் விஜய் அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.