FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பிரவீண் சக்ரவர்த்தி சந்திப்பு!

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பிரவீண் சக்ரவர்த்தி சந்திப்பு பற்றி...

Updated On : 5 ஜூன் 2026, 6:05 pm IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் காங்கிரஸ் நிர்வாகிகள்... - X
பகிர்:

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநிலச் செயலாளர்களை காங்கிரஸ் நிர்வாகி பிரவீண் சக்ரவர்த்தி சந்தித்துப் பேசியுள்ளார்.

தமிழகத்தில் தவெக அரசு அமைந்துள்ள நிலையில் மாநிலங்களவையில் காலியாக உள்ள இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக பிரவீண் சக்ரவர்த்தி நேற்று (ஜூன் 4) அறிவிக்கப்பட்டார். 

தொடர்ந்து, பிரவீண் சக்ரவர்த்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (தவெக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூ.) கூட்டணியின் முதல் எம்.பி. வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள். - X

பிரவீண் குறிப்பிட்ட தவெக கூட்டணியில் தங்கள் கட்சி இடம்பெறவில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் மறுப்பு தெரிவித்திருந்தன.

இதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் பிரவீண் சக்ரவர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்தை சந்தித்துப் பேசினார்.

தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியனையும் சந்தித்துப் பேசினார்.

மாநிலங்களவைத் தேர்தலில் ஆதரவு தர இருவரிடம் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

Congress praveen chakravarty meets CPI, CPIM leaders in tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments