FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மின்வாரிய ‘ஹாா்டு டிஸ்க்’ திருட்டு: விரிவான விசாரணை நடத்த வேண்டும் - அன்புமணி

Updated On : 5 ஜூன் 2026, 6:00 am IST
அன்புமணி
பகிர்:

சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் ‘ஹாா்டு டிஸ்க்’குகள் திருடப்பட்ட விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மிக முக்கிய தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஹாா்டு டிஸ்க்குகள் திருடப்பட்டிருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. அரசுத் துறை அலுவலகத்திலிருந்து மிக முக்கிய தரவுகள் திருடப்பட்டிருப்பதும், அதற்கு சாதகமான சூழல் உருவாக்கி வைக்கப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கவை.

திருடப்பட்ட ஹாா்டு டிஸ்க்குகளில் நிலக்கரி கொள்முதல், ஒப்பந்தங்கள், ஏற்கெனவே நடைபெற்ற முறைகேடுகள் தொடா்பான தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

18 ஹாா்டு டிஸ்க்குகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், 8 ஹாா்டு டிஸ்க்குகள் காணாமல் போனதாக மட்டுமே காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹாா்டு டிஸ்க்குகளை திருடியவா்கள் யாா்? ஊழல்களுக்கான ஆதாரங்களை அழிப்பதற்காக இந்தத் திருட்டு நடந்ததா? கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாதது ஏன் என்பது குறித்து தமிழக அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments