FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அண்ணாமலையின் இது நம்ம இயக்கம்! 8 லட்சத்தைக் கடந்த உறுப்பினர் எண்ணிக்கை!

இது நம்ம இயக்கம் என்று அண்ணாமலை அறிவித்ததும் ஆயிரக்கணக்கானோர் இணைந்துகொண்டேயிருக்கிறார்கள்.

Updated On : 5 ஜூன் 2026, 8:02 pm IST
இது நம்ம இயக்கம் - From web Page
பகிர்:

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை, அந்தக் கட்சியிலிருந்து விலகி, இன்று இது நம்ம இயக்கம் (We the leader) என்ற அமைப்பை தொடங்கிய நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி உறுப்பினர் எண்ணிக்கை 7 லட்சத்தைத் தொட்டிருக்கிறது.

பகல் 3 மணிக்கு இந்த இயக்கத்தில் இணைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி, அதிகரித்துக் கொண்டேயிருந்தது. இப்போது வரை உறுப்பினர் சேர்க்கை எந்த நேரத்திலும் தொய்வில்லாமல் அதிகரித்துக் கொண்டேயிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மாலை 6 மணி நிலவரம்

அண்ணாமலை, தன்னுடைய இயக்கம் பெயர் 'இது நம்ம இயக்கம்' என்று பெயரை அறிவித்து லிங்க்கை வெளியிட்டபோது 14 ஆயிரம் பேர் மட்டுமே இணைந்திருந்தனர்.

Advertisement

Advertisement

பகல் 1 மணியளவில்

ஆனால், அவர் நேரலையில் பேசிக் கொண்டிருக்கும்போதே, ஆயிரக்கணக்கானோர் பல்வேறு கட்சியிலிருந்தும் விலகி, தங்களை இது நம்ம இயக்கம் என்ற அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

சுமார் 12 மணிக்கு அண்ணாமலை பேசத் தொடங்கிய நிலையில், 12.42 மணியளவில், அந்த இயக்கத்தில் கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேர் இணைந்திருந்தனர். இந்த எண்ணிக்கை சற்றும் ஓயாமல், ஓடிக்கொண்டேயிருக்கிறது. ஒரு சில மணி நேரங்களில் இது பல லட்சமாக மாறியிருக்கிறது.

ஜூன் 5ஆம் தேதி பகல் 12.42 மணி நிலவரம்

முதலில் இயக்கமாக அனைவரையும் உள்ளே கொண்டுவந்து, பிறகு அரசியல சொல்லிக்கொடுத்து கட்சியாக மாற்றுவேன். தமிழ்நாட்டின் அரசியல் மொழி, இலக்கணத்தை மாற்ற வேண்டும் என்பதே நோக்கம். நான் தொடங்கியுள்ள தனி இயக்கம் தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் என்றும் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இது நம்ம இயக்கம் என்ற பெயரில் அண்ணாமலை புதிய இயக்கத்தைத் தொடங்கி wetheleader என்ற இணையதளத்தின் லிங்கையும் பகிர்ந்திருந்தார். அவர் தன்னுடைய இயக்கத்தின் லிங்கை அறிவித்ததும் ஆயிரக்கணக்கானோர் அதில் தங்களது பெயர், ஊர் போன்ற விவரங்களை அளித்து உறுப்பினர்களாக சேர்ந்து கொண்டேயிருக்கிறார்கள்.

மறுபக்கம் எக்ஸ் போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது இது நம்ம இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டதற்கான அடையாள அட்டையையும் பகிர்ந்து வருகிறார்கள்.

பகல் 12 மணிக்கு அண்ணாமலை பேச்சைத் தொடங்கிய போது 14 ஆயிரம் என்று இருந்த உறுப்பினர் எண்ணிக்கை, பிற்பகல் 3 மணிக்கு 4.04 லட்சம் பேராக மாறியது. இந்த இயக்கத்தில், இரவு 8 மணியளவில் சுமார் 8 லட்சத்தைக் கடந்து 8,35,479 உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.

summary

This is our movement.. People will join when Annamalai is announced!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments