வெய்யில் பற்றி வானிலை ஆய்வு மையம் சொன்ன நல்ல செய்தி!
வெய்யில் பற்றி வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பது பற்றி..
தமிழ்நாட்டில் ஜூன் 10-க்குப் பின் வெய்யில் படிப்படியாகக் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஓரிரு மாதங்களாகத் தமிழகத்தில் அதிகப்படியான வெய்யில் சுட்டெரித்து வருகின்றது. அதீத வெய்யிலால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளானர்.
வெய்யிலின் முக்கிய மாதங்களாகக் கருதப்படும் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெய்யில் ஏப்ரல் 4 முதல் மே 28 வரை நிலவியது. கத்திரி வெய்யில் நிறைவடைந்ததும் வெய்யிலின் தாக்கம் குறையவில்லை.
Advertisement
Advertisement
குழந்தைகள், முதியோர்கள், வெளியில் வேலைக்குச் செல்பவர்கள், வாகன ஓட்டிகள் என வெப்பநிலையைச் சமாளிக்க முடியாமல் பெரும் அவதியடைந்தனர். அதிகப்படியான வெப்பத்தால் பல்வேறு வெப்ப நோய்கள் பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டது.
இதனிடையே, தென்கிழக்கு அரபிக் கடல், தென்மேற்கு-தென்கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் ஸ்ரீவிஜயபுரம் உள்பட அந்தமான்-நிகோபாா் தீவுப் பகுதிகளில் கடந்த மே 16ல் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது.
விவசாயிகளின் முதுகெலும்பாகத் திகழும் தென்மேற்குப் பருவமழை இந்தாண்டு மே 26ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜூன் 4-ல் தென்மேற்குப் பருவமழை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
இதனிடையே தமிழ்நாட்டில் இந்த வாரத்தில் பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை தாமதமானாலும், கிட்டத்தட்ட 90 சதவீத மழைப்பொழிவு பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் சொன்ன நல்ல செய்தி..
ஜூன் 08, 09 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
இருப்பினும், ஜூன் 10 முதல் 12 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாகக் குறையக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
பருவமழைத் தொடங்கவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் குறையும் எனப் பலரின் எதிர்பார்ப்பாகவே உள்ளது.