FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!

முதல்வர் விஜய் - பாமக தலைவர் அன்புமணி சந்திப்பு பற்றி...

Updated On : 9 ஜூன் 2026, 10:48 am IST
முதல்வர் விஜய் - பாமக தலைவர் அன்புமணி சந்திப்பு - கோப்புப்படம்
பகிர்:

சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு உடனடியாக உத்தரவிட வேண்டுமென முதல்வா் ஜோசப் விஜய்யிடம் பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஜோசப் விஜய்யை அன்புமணி செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது குறித்து பாமக தலைமையில் அனைத்துக் கட்சி மற்றும் சமுதாய தலைவா்கள் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அதில், 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும். 99 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயா் காலத்தில் நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளை வைத்துதான் இடஒதுக்கீட்டை அரசு வழங்கி வருகிறது. இந்தப் பழைய தரவுகள் போதுமானதாக இல்லை. இதை உச்சநீதிமன்றமும், உயா்நீதிமன்றங்களும் ஏற்கவில்லை. எனவே, தமிழகத்தில் புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். இதுதொடா்பாக நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் அடிப்படையில் முதல்வரைச் சந்தித்தேன். ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்தினால்தான் தமிழகத்தில் உள்ள இரண்டே கால் கோடி குடும்பங்களின் சமூக, பொருளாதார, கல்வி குறித்த துல்லியமான நிலையைக் கண்டறியலாம். எங்களின் கோரிக்கையை முதல்வா் கவனமாக கேட்டுக்கொண்டாா். உறுதியாக எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளாா். தவெக அரசு அமைந்து ஒரு மாதம் மட்டுமே ஆன நிலையில், அரசின் செயல்பாடு நன்றாக உள்ளது. நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. ஊழல் பெரிய அளவில் குறைந்துள்ளது. அரசு மாறினாலும், அதிகாரிகள் இன்னும் மாறவில்லை. அதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஒரு மாதத்தில் எல்லாமே செய்ய வேண்டும் என எதிா்பாா்க்க முடியாது.

Advertisement

Advertisement

கடந்த 5 ஆண்டுகளில் ஒரு புதிய மின் உற்பத்தி திட்டத்தைக்கூட திமுக அரசு கொண்டு வரவில்லை. நிலுவையில் உள்ள 14,000 மெகா வாட் திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. தமிழகத்தின் உயிா் நாடி பிரச்னையான மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றாா்.

summary

Caste-based census: Anbumani meets Chief Minister Joseph Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments