கோவை சிறுமி வன்கொடுமை வழக்கு! 3 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்!
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 வாரங்களில் காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல்...
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் 3 வாரங்களில் காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
சூலூர் பகுதியில், 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் (33) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பாரதிபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க, கடந்த ஜூன் 3 அன்று போக்சோ நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் ஜூன் 12 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த காவல் துறையினர் சம்பவம் நடைபெற்று 3 வாரங்களில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
முன்னதாக, கோவையில் 10 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. மேலும், சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகள் இருவரும் சகக் கைதிகளால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The police have filed a charge sheet within three weeks in the case involving the sexual assault and murder of a young girl in Coimbatore.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.