ரஜினியின் பெயர், புகைப்படத்தை எந்த கட்சியோ, அமைப்போ பயன்படுத்தக் கூடாது!
ரஜினியின் பெயர், புகைப்படத்தை எந்த கட்சியோ, அமைப்போ பயன்படுத்தக் கூடாது என ரசிகர் மன்றம் அறிக்கை...
ரஜினிகாந்தின் பெயர், புகைப்படத்தை எந்த கட்சியோ, அமைப்போ பயன்படுத்தக் கூடாது என ரஜினி ரசிகர் மன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"நமது அன்பு தலைவர் ரஜினிகாந்தின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ எந்த ஒரு கட்சிக்கோ, அமைப்பிற்கோ பயன்படுத்தக் கூடாது என தலைவரின் உத்தரவுப்படி, ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
முன்னதாக, நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அரசியல் வருகை குறித்து சமூக ஊடகத்தில் பேசும்போது ரஜினியின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். அவர் ரஜினியின் தீவிர ரசிகர் மற்றும் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகவா லாரன்ஸ் பேசும்போது, "நான் அரசியலுக்கு வருவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. அரசியலில் பணம் சம்பாதிக்கவோ சீட்டோ என்னுடைய நோக்கமல்ல. ரஜினிகாந்த் தனக்கு எந்த அளவிற்கு நெருக்கமோ, அதே அளவிற்கு நடிகர் விஜய்யும் தனக்கு மிக நெருக்கமானவர்" என்றார்.
No political party or organization should use Rajinikanth name or photograph
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.