இது ஜனநாயக சோஃபா: உதயநிதிக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்
தவெக அரசை சோஃபா மாடல் அரசு என விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில் குறித்து...
முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசை சோஃபா மாடல் அரசு என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்த நிலையில், அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு பதிலளித்து அமைச்சர் அருண்ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் “sonஆதன” சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிகாரத்தை பரவலாக்கும் , அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோஃபாக்கள் பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்?
நான்கு பேர் மட்டுமல்ல, ஐந்து பேர் மட்டுமல்ல... முதல்வர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோஃபா இது.
Advertisement
Advertisement
சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது.
தமிழ்நாட்டில் மே 5-ல் வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழ்நாட்டில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலே அனைவருக்கும் அதிகாரப் பகிர்வு அளிக்கக்கூடிய ஜனநாயக சோஃபா மட்டும்தான்" என்று கூறியுள்ளார்.
Sofa Model: TVK Minister Arunraaj responds to LoP Udhayanidhi Stalin
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.