புதிய காவிரி நடுவர் மன்றம் ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்
புதிய காவிரி நடுவர் மன்றத்தை திமுக முன்மொழிந்தது ஏன் என திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு விளக்கமளித்துளளார்.
புதிய காவிரி நடுவர் மன்றத்தை திமுக முன்மொழிந்தது ஏன் என திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு விளக்கமளித்துளளார்.
இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் அவர் அளித்த விளக்கத்தில், மேகேதாட்டுவில் அணைக் கட்டக்கூடாது என பலமுறை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். கர்நாடகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மேகேதாட்டுவில் அணை என்பதில் உறுதியாக உள்ளனர்.
மேகேதாட்டு விவகாரத்தை கவனமாக கையாளவில்லை என்றால் மத்திய அரசு அதிகாரிகள் கைகளுக்குச் சென்றுவிடும். காவிரி விவகாரத்தில் தற்போது எழுந்திருப்பது புதிய பிரச்னை. சட்ட சிக்கலில் தமிழ்நாடு சிக்கிவிடக் கூடாது என்பதற்காகவே புதிய காவிரி நடுவர் மன்றம்.
Advertisement
Advertisement
புதிய நடுவர் மன்றம் அமைப்பதே ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாக இருக்கும். புதிய நடுவர் மன்றம் கோரிக்கை ஏற்கெனவே உள்ள தீர்ப்பை எந்தவகையிலும் பாதிக்காது. மேகேதாட்டு விவகாரத்தில் ஒற்றுமையின்மை ஏற்பட்டால் கர்நாடகத்துக்கு சாதகமாகிவிடும்.
மேகேதாட்டு விவகாரத்தில் அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
DMK MLA Thangam Thennarasu has explained why the DMK proposed the new Cauvery Tribunal.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.