முகப்பு
தமிழ்நாடு

டெபாசிட்டை இழந்த ஜெயக்குமார்! ஆட்டோ ஓட்டுநர் அபார வெற்றி!

ராயபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் விஜய் தாமு வெற்றி குறித்து...

விஜய் தாமு | விஜய் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை ராயபுரம் தொகுதியில் தவெக வேட்பாளரும் ஆட்டோ ஓட்டுநருமான விஜய் தாமு சுமார் 14,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை ராயபுரம் தொகுதியில் திமுகவின் சுபைர் கான், அதிமுக முன்னாள் அமைச்சரும் முன்னாள் பேரவைத் தலைவருமான ஜெயக்குமார், தவெக வேட்பாளரும் ஆட்டோ ஓட்டுநருமான விஜய் தாமு, நாம் தமிழர் கட்சியின் பாபு மயிலனும் போட்டியிட்டனர்.

இந்த நிலையில், தவெக வேட்பாளர் விஜய் தாமு 59,091 வாக்குகள் பெற்று, 14,249 வாக்குகள் வித்தியாசத்தில் ராயபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் சுபைர் கான் 44,842 வாக்குகளும், அதிமுகவின் ஜெயக்குமார் 18,420 வாக்குகளும் பெற்று, தோல்வியடைந்தனர்.

Advertisement

Advertisement

இதனிடையே, இதுவரையில் தேர்தலில் போட்டியிடாத ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், எப்படி முன்னாள் வெற்றியாளர்களைத் தோற்கடித்தார் என அரசியல் வல்லுநர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், தீவிர விஜய் ரசிகரான தாமு, தொடக்கத்திலிருந்தே விஜய் மக்கள் இயக்கத்தில் மக்கள் நலப் பணிகளை ஆற்றியதாகவும், ராயபுரம் போன்ற கடலோரப் பகுதிகளில் மீனவர் சமூகத்தின் தேவைகளாக மேம்பட்ட வசதிகள், பாதுகாப்புத் திட்டங்கள், வாழ்வாதார முன்னேற்றம் முதலான வாக்குறுதிகளை அளித்ததும்தான் அவரின் வெற்றிக்கு மையப்புள்ளியாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.

ராயபுரம் தொகுதி, தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்விதமாக வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

summary

TVK Candidate Vijay Dhamu beats Former Minister Jeyakumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments