முகப்பு
தமிழ்நாடு

த.வெ.க.வை ஆதரித்துக் கையெழுத்திட்ட அமமுக எம்எல்ஏ! டிடிவி சொல்வது உண்மையா?

அமமுக எம்எல்ஏ ஆதரவளித்தது தொடர்பாக தவெக விடியோவை வெளியிட்டது பற்றி...

அமமுக எம்எல்ஏ ஆதரவளித்தது தொடர்பாக தவெக வெளியிட்ட விடியோ காட்சி - ANI
பகிர்:

மன்னார்குடி தொகுதி அமமுக எம்எல்ஏ காமராஜ், தவெகவுக்கு ஆதரவுக் கடிதம் எழுதியபோது எடுத்த விடியோவை தவெக வெளியிட்டுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ காமராஜ், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஒப்புதலுடன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

ஆனால், எம்எல்ஏ காமராஜ் அளித்த கடிதம் போலியானது என்று குற்றம்சாட்டியதுடன் தவெக குதிரை பேரம் செய்கிறது, அனைத்து கட்சிகளின் ஆதரவு கடிதங்களையும் ஆளுநர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கோரியிருந்தார்.

Advertisement

Advertisement

அதேபோல எம்எல்ஏ காமராஜூம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் 'தவெக ஆதரவுக் கடிதத்தில் இருக்கும் கையெழுத்து என்னுடையது அல்ல, என்னுடைய கையெழுத்தை யாரோ போட்டுக் கொடுத்திருக்கிறார்கள், நான் நேற்று புதுச்சேரியில்தான் இருந்தேன்' என்று கூறியுள்ளார். மேலும் ஆளுநரிடம் நேரடியாக சென்று, தான் தவெகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு மட்டுமே ஆதரவளிப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.

இதையடுத்து எம்எல்ஏ காமராஜ், தவெகவுக்கு ஆதரவாக கடிதம் எழுதியபோது, எடுத்த விடியோ ஒன்றை தவெக வெளியிட்டுள்ளது.

மேலும் தவெக இதுபற்றி, "தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் கடிதத்தை காமராஜ் தானாக முன்வந்து எழுதியபோது எடுத்த விடியோ இது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் ஒப்புதலுடன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாக காமராஜ் கூறியிருந்தார். ஆனால், காமராஜ் அந்த கடிதத்தை எழுதவில்லை என்ற தகவல் பரவி வருவது உண்மைக்கு புறம்பானது. இதை அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது. இவை அனைத்தையும் மறைத்துவிட்டு டிடிவி தினகரன் தவறான செய்திகளை, பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரை யாருடனும் பேரம் பேச வேண்டிய தேவையில்லை என்பதை பொதுமக்கள் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்" என்றும் தவெக கூறியுள்ளது.

தவெக இந்த விடியோ மற்றும் விளக்கத்தை வெளியிட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதேபோல நேற்று விஜய்யின் பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு முகத்தை மறைத்துக்கொண்டு காரில் சென்றதும் காமராஜ் என்றே கூறப்படுகிறது.

டிடிவி தினகரன் மற்றும் காமராஜின் புகாரும் தவெக வெளியிட்டுள்ள விடியோவும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

summary

AMMK MLA Signs in Support of TVK; Is What TTV Says True

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments